
ஆர்.ஏ.கார்த்திக், இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்துள்ள படம், ‘மேட் இன் கொரியா’. இதை ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார். நெட்ஃபிளிக்ஸில் வெளியாக இருக்கும் இதன் கதை கொரியாவில் நடக்கிறது.
தனது காதலனுடன் கொரியா செல்லும் நாயகி, சியோலில் தனிமையை உணர்கிறார். புதிய இடத்தில் வாழ்வின் சவால்களிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளும் அவர் தன்னை எப்படி மீட்டெடுக்கிறார் என்பது கதை.

