புதுடெல்லி: மேற்குவங்க மாநிலத்தில் பாபர் மசூதி கட்டப்படும் என திரிணமூல் காங்கிரஸின் எம்எல்ஏவான ஹுமாயூன் கபீர் அறிவித்துள்ளார். இதன் பணி முர்ஷிதாபாத்தில் வரும் டிசம்பர் 6, 2025 இல் துவங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் இருந்த பாபர் மசூதி கட்ட அங்கிருந்த ராமர் கோயில் இடிக்கப்பட்டதாக வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கில் இறுதி தீர்ப்பில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. கடந்த நவம்பர் 9, 2019 இன் இந்த தீர்ப்பில், அயோத்திக்கு அருகில் பாபர் மசூதி கட்டவும் நிலம் ஒதுக்கவும் உத்தரவானது. இதையடுத்து உபி அரசு சார்பில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கியும் அதன் பணிகள் இன்னும் துவக்கப்படவில்லை.