ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் மேற்கு கரையில் கடந்த 6ம் தேதி சென்று கொண்டிருந்த பஸ்சின் மீது பாலஸ்தீன போராளிகள் துப்பாக்கியால் சுட்டதில் 3 இஸ்ரேலியர்கள் பலியாகினர். 6 பேர் படுகாயமடைந்தனர். இந்த நிலையில், இந்த தாக்குதலை நடத்திய பாலஸ்தீன போராளிகள் மேற்கு கரையில் உள்ள பர்கின் என்ற இடத்தில் உள்ள வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து நேற்று அந்த வீட்டை இஸ்ரேல் ராணுவம் சுற்றி வளைத்து தாக்கியது. அப்போது 2 பாலஸ்தீன போராளிகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர்.
The post மேற்கு கரையில் 2 பாலஸ்தீனர்கள் சுட்டு கொலை appeared first on Dinakaran.