சென்னை: தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் மாடுபாடு காரணமாக தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்ைன வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்துவரும் நிலையில், அதிகபட்சமாக நேற்று ஈரோடு, மதுரை மாவட்டங்களில் 105 டிகிரி வெயில் கொளுத்தியது. திருத்தணி, பாளையங்கோட்டை, சென்னை 103 டிகிரி, கடலூர் 102 டிகிரி, வேலூர் 101 டிகிரி, சேலம் உள்பட 16 மாவட்டங்களில் 100 டிகிரி வெயில் நிலவியது. வெப்பநிலையை பொருத்தவரையில் கரூர் மாவட்டத்தில் இ யல்பைவிட 5 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பநிலை அதிகரித்து காணப்பட்டது. தஞ்சாவூர், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வரையிலும் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், நீலகிரி, கோவை மாவட்ட மலைப் பகுதிகள், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று கனமழை பெய்தது.
தமிழக வானிலை குறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: கடலோர மாவட்டங்களில் உயர்ந்துள்ள வெப்பநிலையால் கிழக்கு திசை காற்று குளிர்வித்து தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. திருத்தணி-திருவள்ளூர் இடையேயும், விழுப்புரம் மாவட்டம் செய்யூர் சதுரங்க பட்டினம்-மரக்காணம் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியில் நேற்று மதியம் மழை பெய்தது. இது திண்டிவனம் வரை நீண்டது. அதேபோல திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் பகுதிகளுக்கும், அரக்கோணம் பகுதிக்கும் காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கும் முன்னேறியது. மேலும் மேற்கு தொடர்ச்சிமலை மாவட்டங்களிலும் கிழக்கு காற்று சென்று மழை பெய்யத் தொடங்கியது.
இந்நிலையில் வடமேற்கு காற்று வரத்தொடங்கிய நிலையில் நேற்று மதியத்துக்கு பிறகு ஆந்திரப் பகுதியிலும் மழை பெய்தது. அனைத்து பகுதிகளில் இருந்து வீசும் காற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் ஒரு சந்திப்பை ஏற்படுத்தி நேற்று மாலையில் ஆங்காங்கே மழை பெய்யத் தொடங்கியது. நேற்று இரவும் சில இடங்களில் பலத்த மழை பெய்வதற்கான சூழ்நிலையும் உருவானது. கர்நாடக எல்லையோரம், திருப்பத்தூர் ராணிப் பேட்டை திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலும் மழை பெய்யும் சூழல் நேற்று உருவானது. இந்த மழை நேற்று தொடக்கத்தை உருவாக்கியுள்ளது என்று குறிப்பிட வேண்டும்.
இந்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது போல, 13ம் தேதி முதல் கர்நாடக பகுதி, ஆந்திரப் பகுதி, மற்றும் நீலகிரி, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள் என்று பல்வேறு இடங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் வரையில் தொடர்ச்சியாக பெய்யும். குறிப்பாக மழைக்காலமாக மாறப்ேபாகிறது. குஜராத் தொடங்கி கன்னியாகுமரி வரை உள்ள மேற்கு தொடர்ச்சிமலை பகுதிகளில் இந்தமழை பெய்யும். தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும். டெல்டா மாவட்டங்களுக்கு நெருக்கமாகவும் வந்து பெய்யும். 14ம் டெல்டாவில் பெய்யத் தொடங்கி தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
கோவை, திருப்பூர் மாவட்டம் தூத்துக்குடி தென்காசி ராமநாதபுரம், மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும். 15ம் தேதி மேலும் பரவலாகி வட கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும். 17ம் தேதிக்கு பிறகும் 20ம் தேதிக்கு பிறகும் மேலும் தீவிரமாக மழை பெய்யத் தொடங்கும். காற்று குவித்தல் காரணமாக தமிழ்நாடு வழியாக வடமேற்கு நோக்கி காற்று செல்லும் என்பதால் மழை பரவலாக பெய்யும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, அந்தமான் கடல், அந்தமான் மற்றும் நிகோபார் தீவு மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் இன்று தென் மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது தவிர மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும். 14ம் தேதி நீலகிரி,கோவை மாவட்ட மலைப் பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். இதே நிலை 15ம் தேதியும் நீடிக்கும். 16ம் தேதி கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
வெப்பநிலையை பொருத்தவரையில் இன்றும் நாளையும் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரையில் அதிகரித்து காணப்பட்டாலும், அதற்கு அடுத்த நாட்களில் வெப்பநிலை குறையத் தொடங்கும். மேலும் 14ம் ேததி வரையில் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிமீ முதல் 55 கிமீ வேகத்தில் வீசும். தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வ ங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கிமீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.
The post மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் இடி மின்னலுடன் மழை பெய்யும்: சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் appeared first on Dinakaran.