*கலெக்டர் ஷஜீவனா ஆய்வு
போடி : போடி மேல சொக்கநாதபுரம் சாலையில் மங்களக்கோம்பை கால்வாயில் தடுப்புச்சுவர், ஆக்கிரமிப்பு அகற்றி 400 மீட்டர் கழிவுநீர் வாறுகால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் தர்மத்துப்பட்டி, கீழசொக்கநாதபுரம், முதல்வர் காலனி, வினோபாஜி காலனி, கிருஷ்ணா நகர், மகாலட்சுமி நகர், ரெங்கநாதபுரம், கரட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 16 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்.
போடி அருகே தேவாரம் சாலை ரெங்கநாதபுரம் தர்மத்துப்பட்டி இடையே மேலசொக்கநாதபுரம் பிரிவிலிருந்து ஊருக்குள் செல்லும் மேல செக்கநாதபுரம் பஸ் நிறுத்தம் வரை ஊர இருக்கும் சாலை பரபரப்பு மிகுந்ததாக உள்ளது.
அதிகளவு பல தரப்பட்ட வாகனங்கள் சுந்தரராஜபுரம், மீனாட்சிபுரம், தேனி, பத்ரகாளிபுரம், டொம்புச்சேரி, உப்புகோட்டை, வீரபாண்டி போன்ற பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் மிக மிக அத்தியாவசிய சாலையாக இருக்கிறது. தொடந்து மீனாட்சிபுரம், தேனி விசுவாசபுரம், பத்ரகாளிபுரம் காமராஜபுரம், டொம்புச்சேரி, உப்புக்கோட்டை, வீரபாண்டி என பல்வேறு கிராமங்களுக்கு செல்லலாம்.
இந்த குறுகிய சாலையில் 800 மீட்டர் அளவு மேடு பள்ளங்களாகவும் குறுகியதாகவும் இருப்பதால் போக்குவரத்திற்கு சிரமாக இருந்து வந்தது. மேலும் டூவீலர்கள், விவசாய வாகனங்கள், கார்கள் என அடிக்கடி விபத்துகளில் சிக்குவதால் பலரும் பாதிப்படைகின்றனர்.
மேலும் போடி மெட்டு மலை அடிவாரம் பரமசிவன் கோயில் வழியாக வரும் மங்களகோப்பை நீண்ட கால்வாயும் இச்சாலை வழியாக கடந்து சங்கரப்பநாயக்கன் கண்மாய், மற்றும் மீனாட்சியம்மன் கண்மாய் சென்றடைகிறது.
இதனால் இச்சாலையை சர்வே செய்து சற்று விரிவாக்கமும் செய்து, கடக்கின்ற வாகனங்களும் அதிகரிப்பதால் விபத்து நடக்காத வகையில் சிரமம் இன்றி பாதுகாப்பாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள், தொழிலாளர்கள் ஓட்டுநர்கள் என கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி மாநில நெடுஞ்சாலைத் துறையினர் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விளக்கம் அளித்து அனுமதி பெற்றனர். அதன்படி ரூ.1.60 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் செய்ய உத்தர விடப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தொடந்து இச்சாலையில் கடக்கும் மங்களக் கோம்பை கால்வாயில் தூர்வாரி மண் மற்றும் இதர கழிவுகள் அனைத்தும் அள்ளி ஆழப்படுத்தி அப்புறப்படுத்தப்பட்டது. பாதியளவில் தரையில் சிமெண்ட் பேஸ் மட்டம் அமைத்து கால் பங்கு மறைத்து மேலும் கரை வழியாக தடுப்பு சுவர் எழுப்பி சாலை சற்று விரிவாக்கம் செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் இருபுறங்களிலும் அகன்ற சாக்கடை வாறுகால் அமை ப்பதற்கு ஏற்கனவே ஆக்கிரமிப்பு இடங்களை அகற்றினர்.
சில இடங்களில் விட்டு விட்டதால் பொதுமக்கள் பலர் விடுபட்டு போன இடங்களிலும் உடனடியாக ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும் என பேரூராட்சி அதிகாரிகளுடன் பாதிக்கப்பட்டவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மாநில நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகளும் தலையிட்டு சமாதானம் செய்தனர். தொடர்ந்து சாலை தெற்கு திசையில் இருந்து 400 மீட்டர் அள விற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு அகன்ற, ஆழமான கழிவுநீர் வாறுகால் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இது குறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வாறுகால் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் நிறைவடைந்தவுடன் 800 மீட்டர் சாலையில் விரிவாக்கத்துடன் தார்சாலை அமைக்கப்படும்’’என்றார்.
தொடர்ந்து போடி தாலுகா அளவில் இரண்டு நாட்களாக முதலமைச்சரின் சிறப்பு திட்டமான உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் நடந்து வருகிறது. அதில் மாவட்ட கலெக்டர் போடி அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சியில் நடந்து வருகின்ற பல்வேறு வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது மேல சொக்கநாதபுரம் பிரிவிலிருந்து 800 ஊருக்குள் பேருந்து நிறுத்தம் வரையில் ரூ.1.60 கோடி மதிப்பீட்டில் நடைபெறும் வாறுகால், இரண்டு பாலங்கள் மேலும் விரைவில் தார்ச்சாலை அமைக்கும் பணிகளை பார்வையிட்டார். அப்போது மாநில நெடுஞ்சாலைதுறை அதிகாரிகள் உடன் இருந்து விளக்கம் அளித்தனர்.
The post மேலசொக்கநாதபுரம் சாலையில் ரூ.1.60 கோடியில் வாறுகால் அமைக்கும் பணி தீவிரம் appeared first on Dinakaran.