ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இயங்கும் இனிப்பகங்கள் ‘பாக்’ என பெயர் கொண்ட இனிப்புகளின் பெயரை மாற்றியுள்ளன. தேசத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும், பாகிஸ்தான் குறியீட்டை தவிர்க்கும் வகையிலும் இந்த நகர்வை அங்கு செயல்படும் சிறியது முதல் பெரியது வரையிலான இனிப்பகங்கள் கையில் எடுத்துள்ளதாக தகவல்.
இதனால் மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக், ஸ்வர்ண பஸம் பாக் போன்ற இனிப்புகளின் பெயர் மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ, ஸ்வர்ண ஸ்ரீ என மாற்றப்பட்டுள்ளது.