
புதுடெல்லி: மொசாம்பிக் நாட்டில் படகு கவிழ்ந்து 3 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளுள் ஒன்று மொசாம்பிக். இங்கு ஏராளமான இந்தியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மொசாம்பிக் நாட்டின் மத்திய பகுதியிலுள்ள பெய்ரா துறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் காலை ஒரு படகு புறப்பட்டது.

