சென்னை: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மோதின. முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.5 ஓவர்களில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக டெவால்ட் பிரேவிஸ் 25 பந்துகளில், 4 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 42 ரன்களும், ஆயுஷ் மாத்ரே 19 பந்துகளில், 6 பவுண்டரிகளுடன் 30 ரன்களும் விளாசினர். ஹைதராபாத் அணி சார்பில் பந்து வீச்சில் ஹர்ஷால் படேல் 4 ஓவர்களை வீசி 28 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். பாட் கம்மின்ஸ், ஜெயதேவ் உனத்கட் ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் முகமது ஷமி, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.