தானே: மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம் என்று ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்வதற்கான முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், தானே நகரில் செய்தியாளர்களிடம் பேசிய மாநிலத்தின் தற்காலிக முதல்வரான ஏக்நாத் ஷிண்டே, "மகாராஷ்டிராவில் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் நாங்கள் கடுமையாக உழைத்தோம். தேர்தல் பிரச்சாரம் தொடங்குவதற்கு முன் நாள்தோறும் 2-3 மணி நேரமே நான் தூங்கினேன். மாநிலம் முழுவதும் விரிவான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டேன்.