போபால்: மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் யாசகம் எடுப்பதை அதிகாரிகள் தடை செய்துள்ளனர். மேலும், யாராவது யாசகம் கேட்கும்போது அவர்களுக்கு யாசகம் வழங்கவும் தடை செய்யப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசம் – போபாலில் உள்ள சாலைகள், போக்குவரத்து சிக்னல்கள் உள்பட பொது இடங்களில் யாசகம் பெற்று பிழைப்பு நடத்துவோர் அதிகளவில் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும், அவர்கள் போதைப்பொருள் புழக்கத்துக்கு காரணமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.