“டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வைத்து விற்கின்றனர். இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.3,600 கோடி கிடைக்கிறது. இது மிகப்பெரிய ஊழல்” – அண்மையில் நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் இபிஎஸ் இப்படி ஆவேசப்பட்டார்.
மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற முழக்கங்களுக்கு மத்தியில், “டாஸ்மாக்கில் குவாட்டருக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை ஒழிக்கவே முடியாதா?” என்று ‘குடி’மகன்களின் கோபக் குரல்களும் கேட்டுக்கொண்டே இருக்கின்றன.