வாஷிங்டன்: பரஸ்பர அளவில் வரி விதிக்கும் அமெரிக்காவின் முடிவில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ள அதிபர் டொனால்டு ட்ரம்ப், இந்த விவகாரத்தில் யாரும் என்னுடன் வாதிட முடியாது என கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சிக்கு கூட்டாக அளித்த பேட்டி செவ்வாய்க்கிழமை ஒளிபரப்பானது. அந்த நேர்காணலில், பிரதமர் மோடி உடனான சமீபத்திய சந்திப்பு குறித்தும், பரஸ்பர அளவிலான வரி விதிப்பு முறையில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வி எழுப்பினார்.