அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரத்தில் ‘யார் அந்த சார்?’ என பதாகை தூக்கி திமுக அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது அதிமுக. இதற்குப் போட்டியாக, ‘யார் அந்த அண்ணன்?’ என போஸ்டர்களை ஒட்டி அதிமுக-வை சீண்டி இருக்கிறது நெல்லை திமுக.
‘அண்ணா… பெல்ட்டால அடிக்காதீங்கண்ணா… யார் அந்த அண்ணன்?’ ‘மாதம் ஆயிரம் கொடுத்து அரசாங்கம் எங்கள படிக்க அனுப்புது… பொள்ளாச்சி புகழ் கள்ளக்கூட்டணி பயமூட்டி – பொண்ணுங்க படிப்பை நிறுத்தப் பார்க்குது’ என்று தமிழ்நாடு மாணவர் மன்றம் – மாணவியர் பிரிவு என்ற பெயரிலும், திமுக-வினர் பெயர் தாங்கியும் நெல்லை மாநகரில் போஸ்டர்கள் கண்ணைப் பறிக்கின்றன.