அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்க டிரம்ப் தயாராகி வருகிறார். அவரது ஆட்சியில் வெளியுறவுக் கொள்கையில் மாற்றம் இருக்கும் என்பதை அவரது பேச்சுகள் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன. யுக்ரேன், நேட்டோ, சீனா, இஸ்ரேல் ஆகியவை மீதான அமெரிக்காவின் நிலைப்பாடு டிரம்ப் ஆட்சியில் எப்படி இருக்கும்?