புதுடெல்லி: யுனெஸ்கோவின் உலக நினைவகப் பதிவேட்டில் ஸ்ரீமத் பகவத் கீதை மற்றும் பாரத முனிவரின் நாட்டிய சாஸ்திரம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, இது பெருமைமிக்க தருணம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
உலக நினைவகப் பதிவேட்டில், சுவிட்சர்லாந்தின் ஜெனீவா உடன்படிக்கைகள் (1864-1949) மற்றும் அவற்றின் நெறிமுறைகள் (1977-2005), மனித உரிமைகளுக்கான உலகளாவிய பிரகடனம் (ஐக்கிய நாடுகள் சபை), பத்திரிகை சுதந்திரத்திற்கான உலகளாவிய விண்ட்ஹோக் பிரகடனம் உள்ளிட்ட சர்வதேச ஒத்துழைப்பின் முக்கிய ஆவணங்கள் இடம் பெற்றுள்ளன. புதிதாக 74 ஆவணங்கள் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்த பட்டியலில் மொத்த ஆவணங்களின் எண்ணிக்கை தற்போது 570 ஆக அதிகரித்துள்ளது.