சமுத்திரக்கனியிடம் இணை இயக்குநராக பணியாற்றிய சாம் இயக்குநராக அறிமுகமாகும் படம், ‘யோலோ’. இதில் நடிகர் பூர்ணேஷ், தேவ் என்ற பெயரில் நடிக்கிறார். தேவிகா, டி.வி.நடிகர் ஆகாஷ், படவா கோபி, நிக்கி, சுபாஷினி கண்ணன் என பலர் நடிக்கின்றனர். எம்ஆர் மோஷன் பிக்சர்ஸ் சார்பில் மகேஷ் செல்வராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சூரஜ் நல்லுசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். சகிஷ்னா சேவியர் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் பற்றி சாம் கூறும்போது, “இது ரொமான்டிக் காமெடி படம். வாழ்வது ஒருமுறைதான் என்பது கான்செப்ட். இது கருத்துச் சொல்லும் படமல்ல. காதல், காமெடி என்று ஜாலியாக இருக்கும். இன்றைய இளைஞர்களைக் குறிவைத்து உருவாக்கி இருக்கிறோம். அனைவருக்கும் இந்தப் படம் பிடிக்கும்.