
நடிகர் சாய்குமார் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். தனது 50 வருட சினிமா வாழ்க்கையில் சுமார் 300-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள அவர், டப்பிங் கலைஞராக ஆயிரம் படங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார்.
அவர் கூறும்போது, “14 வயதிலேயே நடிக்க வந்துவிட்டேன். “தேவுடு சேசினா பெல்லி” என்ற தெலுங்கு படத்தில் பார்வையற்ற சிறுவனாக நடித்தேன். மூத்த நடிகர்களுடனும் அதில் நடிக்க வேண்டியிருந்தது. அப்போது அது அவ்வளவு எளிதானதல்ல. என் பெற்றோர் அப்போது எனக்குச் சொன்னது, ‘இயக்குநரின் நடிகனாக இரு’ என்பதைத்தான்.

