ரஜினி – கமல் இணையும் படம் ஏன் நடைபெறவில்லை என்பதற்கான காரணத்தை லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார். ‘விக்ரம்’ படத்துக்கு முன்பாக, ரஜினி – கமல் இணைந்து நடிக்க இருந்த படத்தை இயக்க இருந்தார் லோகேஷ் கனகராஜ். அப்படம் எதனால் நடக்கவில்லை என்பதற்கான காரணத்தை தற்போது பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
“ரஜினி சார், கமல் சார் இருவரையும் இணைத்து படம் பண்ண ரொம்பவே முயற்சித்தேன். கரோனாவால் அது நடக்கவில்லை. மூவரும் இணைந்து படம் பண்ண ஒப்பந்தம் வரை சென்றோம். கதையை கூறி முடித்தவுடன், என் முன்னே ரஜினி சார் – கமல் சார் இருவருமே தொலைபேசியில் பேசினார்கள்.