மும்பை: ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை அணி தனது அடுத்த ஆட்டத்தில் வரும் 23-ம் தேதி ஜம்மு & காஷ்மீர் அணியை எதிர்த்து விளையாடுகிறது. இந்த ஆட்டம் மும்பையில் உள்ள எம்சிஏ-பிகேசி மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான மும்பை அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். கேப்டனாக அஜிங்க்ய ரஹானே தொடர்கிறார்.