சென்னை: ரமலான் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அன்புமணி(பாமக தலைவர்): உலகில் அமைதி, வளம், மகிழ்ச்சி, கல்வி, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகுவதற்காக பாடுபடுவதற்கு இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம். ராமதாஸ்(பாமக நிறுவனர்): வாழ்வில் நன்மைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்று ரமலான் திருநாளில் உறுதியேற்போம். திருநாவுக்கரசர் (எம்.பி):கடந்த ஒரு திங்களாக பசி, தாகத்தை அடக்கி உண்ணா நோன்பிருந்த இஸ்லாமிய பெருமக்களுக்கு ஈகைத் திருநாள் வாழ்த்துகள்.
செல்வபெருந்தகை (காங்கிரஸ் மாநில தலைவர்):இல்லாத ஏழைகள் வாழ்வில் ஏற்றம் பெற உதவும் இஸ்லாமியர்கைள இத்திருநாளில் வாழ்த்துவோம்.
வைகோ(மதிமுக பொதுச்செயலாளர்):ஏழை, எளிய மக்களுக்கு ஜக்காத் என்னும் நன்கொடைகளை வாரி வழங்கி, ஈதுப் பெருநாளில் மகிழ்ச்சியில் திளைக்கின்ற இஸ்லாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துகள்.
ஓ.பன்னீர்செல்வம்:இந்த ரம்ஜான் திருநாள் இஸ்லாமியர்களுக்கு ஏற்றத்தையும் இன்பத்தையும் தருவதாக அமையட்டும்.
ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):அனைத்து இஸ்லாமிய பெருமக்களும் இறைவனின் கருணையும், நல்லாசியும், அனைத்து செல்வங்களும் பெற்று வாழ வேண்டும்.
தமிழ்நாடு ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலாளர் மு.பன்னீர்செல்வம்: ரமலான் கற்றுத் தரும் பாடங்களை அனைத்து மதத்தவரும் கடைப்பிடித்தால் உலகம் முழுவதும் வாழும் மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகும்.
தமிழ்நாடு மண் பாண்ட தொழிலாளர்கள் குலாலர் சங்க தலைவர் சேம.நாராயணன்: ஐந்து வேளை தொழுகை என்பது நோன்பு முடியும் வரை அல்ல இந்த உலகை விட்டு நம் உயிர் பிரியும் வரை என்ற நபிகள் நாயகத்தின் நல்வழி மூலம் தங்கள் செயலை அமைத்துக் கொண்டு வாழும் இஸ்லாமியர்கள் அனைவருக்கும் ரம்ஜான் நல்வாழ்த்துகள்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன், புதிய நிதி கட்சி தலைவர் எ.சி சண்முகம், இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் மற்றும் நிலத்தரகர்கள் நலச்சங்க தலைவர் விருகை கண்ணன், தமிழக மக்கள் முன்னேற்றக்கழக தலைவர் ஜான்பாண்டியன், அகில இந்திய ரியல் எஸ்டேட் வர்த்தகர்கள் மற்றும் முகவர்கள் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் ஏ.ஹென்றி, தேசிய நாடர் சங்கம் பொதுசெயலாளர் விஜயகுமார், இந்திய நாடார்கள் பேரமைப்பின் நிறுவனர்-தலைவர் ராகம் சௌந்தரபாண்டியன், விஜய் வசந்த் எம்.பி, எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
The post ரமலான் பண்டிகையையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து appeared first on Dinakaran.