சென்னை: ரமலான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும் என்று ஆர்.பி.ஐ அறிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டுக்கான கணக்குகளை முடிக்க வேண்டியுள்ளதால் வங்கிகளுக்கு விடுமுறை இல்லை. அரசு விடுமுறை தினமான இன்று வங்கிகள் செயல்படுவது தொடர்பாக ஆர்.பி.ஐ. விளக்கம் அளித்துள்ளது.
சென்னை: ரம்ஜான் பண்டிகையையொட்டி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தாலும், 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வருவதால், இன்று வங்கிகள் மற்றும் வருமான வரித்துறை அலுவலகங்கள் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
பண்டிகையையொட்டி வங்கிகளுக்கு அரசு விடுமுறை என ரிசர்வ வங்கியின் வருடாந்திர காலண்டரில் அறிவித்திருந்த நிலையில், இன்று நாடு முழுவதும் வங்கிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், இன்றுடன் 2024-25 நிதியாண்டு முடிவுக்கு வரவுள்ளதால் கணக்குகளை முடிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் இறுதி நாளான இன்று வரி செலுத்துபவர்களுக்கு உதவும் வகையிலும் சுமுகமான நிதி பரிவர்த்தனையை உறுதி செய்யும் விதமாகவும் வங்கிகள் இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ள ரிசர்வ் வங்கி, குறிப்பாக அரசு ரசீதுகள் மற்றும் நிதிகளை கையாளும் வங்கிகள், வழக்கமாக செயல்படும் நேரத்தில் கட்டாயம் செயல்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகள் விடுமுறை கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமைகள் உள்பட 16 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கி சேவைகளைப் பயன்படுத்தும்போது எந்தப் பிரச்சினையும் ஏற்படாதவாறு வாடிக்கையாளர்கள் இந்த விடுமுறை நாட்களை முன்கூட்டியே தெரிந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அதன்படி, நிதியாண்டின் இறுதியில் வங்கி மூடல் காரணமாக ஏப்ரல் 01 செவ்வாய்க்கிழமை வங்கிகள் மூடப்படும். அன்று வாடிக்கையாளர்கள் வங்கிச் செயல்பாட்டைப் பெற முடியாது. ரிசர்வ் வங்கியின் விடுமுறை பட்டியலின்படி இது பொது விடுமுறையாகக் கருதப்படுகிறது. இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவைகள் வழக்கம் போல் எந்தத் தடையும் இல்லாமல் தொடரும்.
The post ரமலான் பண்டிகை தினமான இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்: ஆர்.பி.ஐ அறிவிப்பு appeared first on Dinakaran.