அமராவதி: புனித ரமலான் மாதத்தை முன்னிட்டு மாநிலத்தில் அரசுப் பணியில் உள்ள அனைத்து இஸ்லாமிய ஊழியர்களும் ஒரு மணி நேரம் முன்னதாகவே தங்கள் பணியை முடித்துக் கொண்டு செல்லலாம் என ஆந்திர மாநிலத்தில் ஆட்சியில் உள்ள முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இதே உத்தரவை தெலங்கானாவில் ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசு அறிவித்தது. இதை பாஜக விமரிசித்திருந்த நிலையில் தற்போது ஆந்திர அரசும் அதே உத்தரவை வெளியிட்டுள்ளது.