வடலூர்: கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ரயில் நிலையம் வழியாக திருச்சி, கடலூர், விருத்தாசலம், காரைக்கால், பெங்களூர் உள்ளிட்ட ஊர்களுக்கு ரயில்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நேற்று காலை இங்குள்ள நடைமேடையில் உள்ள பென்சிங்கில் 50 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கண்ட ரயில் பயணிகள் குறிஞ்சிப்பாடி ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கடலூர் ரயில் நிலைய போலீசாருக்கு தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று விசாரணை மேற்கொண்டனர். ஆனால் அடையாளம் தெரியவில்லை. ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அந்த பெண் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்து தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய பெண் சடலம் appeared first on Dinakaran.