
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியா பெரும்பாலும் நிறுத்திவிடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மாளிகையில் நேற்று (அக். 22) செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப் போவதாக இந்தியா என்னிடம் ஏற்கனவே கூறியது உங்களுக்கும் தெரியும். இது ஒரு செயல்முறை. திடீரென நிறுத்த முடியாது. இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா பெரும்பாலும் நிறுத்திவிடும். 40% அளவுக்கு நிறுத்திவிடுவார்கள். இந்தியாவின் செயல்பாடு மிகச் சிறப்பானது. பிரதமர் மோடியுடன் நேற்று நான் பேசினேன். உண்மையில் அவர்கள் மிகவும் சிறப்பானவர்கள்.” என தெரிவித்துள்ளார்.

