கீவ்: உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக நடைபெற இருந்த அமைதி பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. 3 ஆண்டுகளை கடந்து நீடிக்கும் உக்ரைன் – ரஷ்யா போருக்கு தீர்வு காண அமெரிக்கா தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ரஷ்யா – உக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்த பேச்சுவார்த்தை மாஸ்கோவில நேற்று நடைபெற இருந்தது. இதில் அமெரிக்க அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் உக்ரைன், இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள இருந்தனர்.
ஆனால் பேச்சுவார்த்தை தொடர்பான திட்டமிடலில் சிக்கல் எழுந்த காரணத்தால் பேச்சுவார்த்தையில் பங்கேற்க முடியாது என அமெரிக்க வௌியுறவுத்துறை அமைச்சர் ரூபியோ கூறி விட்டார். இதன் காரணமாக கடைசி நேரத்தில் பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது. மேலும், லண்டனில் நடத்த திட்டமிடப்பட்டுள்ள அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் பிரிட்டன் அரசின் உயரதிகாரிகள் கலந்து கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் உள்ள அதிகாரிகளே கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ரஷ்யா – உக்ரைன் போர் அமைதி பேச்சுவார்த்தை கடைசி நேரத்தில் ரத்து appeared first on Dinakaran.