புதுடெல்லி: சர்வதேச சக்திகளுடன் இணைந்து நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கும் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மிக உயர்ந்த துரோகி என பாஜக எம்.பி.க்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மக்களவையில் பாஜக எம்.பி.க்கள் லட்சுமண் மற்றும் சம்பத் பத்ரா ஆகியோர் வியாழக்கிழமை ஒரு பிரச்சினையை எழுப்பினர். பிரான்ஸ் ஊடகம் ‘மீடியா பார்ட்’-ல் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி அவர்கள் கூறும்போது, “ஓசிசிஆர்பி ( குற்றம் மற்றும் ஊழல் அறிக்கை திட்டம்) என்ற புலனாய்வு ஊடக அமைப்பு, பல நாடுகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் இணைந்துள்ளன. ஓசிசிஆர்பி தனது பணிக்கான நிதிக்கு கோடீஸ்வர முதலீட்டாளர் ஜார்ஜ் சோரஸ் மற்றும் அமெரிக்காவில் உள்ள ‘டீப் ஸ்டேட்’ முகமைகளை சார்ந்துள்ளன.