புதுடெல்லி: மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் இண்டியா கூட்டணி கூட்டம் நாளை மறுதினம் நடைபெறவுள்ளது. இதில் பல விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்படும். இந்த கூட்டம் கடந்தாண்டு மக்களவை தேர்தல் தோல்விக்குப்பின், நடைபெறும் இண்டியா கூட்டணியின் முதல் கூட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பிஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடாளுமன்றத்தை நோக்கி வரும் 8-ம் தேதி பேரணி செல்லவும் இண்டியா கூட்டணி திட்டமிட்டுள்ளது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனவும், அரசியல் சாசன விதிமுறைகளை தேர்தல் ஆணையம் மீறுவதாகவும் இண்டியா கூட்டணி கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன.