சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பண மோசடி வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிடக் கோரி ரவீந்திரன் என்பவர் சார்பில் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. உத்தரவு அமல்படுத்தியது குறித்து அறிக்கை தாக்கல் செய்வதற்காக இந்த வழக்கு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக வழக்கு தொடர அரசின் அனுமதி பெறும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, உயர் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால் வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார். இந்நிலையில், இந்த உத்தரவை மாற்றியமைக்க கோரி காவல் துறை தரப்பில் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நிவாரணம் பெற தெரிவித்தார்.
The post ராஜேந்திர பாலாஜி வழக்கை சிபிஐக்கு மாற்றியதை மறுபரிசீலனை செய்ய ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.