புதுடெல்லி: மும்பை தாக்குதலில் தொடர்புடைய தஹாவூர் ராணாவை, இடுப்பு, காலில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் என்ஐஏ அதிகாரிகளிடம் அமெரிக்க காவல்துறை ஒப்படைத்த முதல் படம் வெளியாகியுள்ளது.
மும்பை கடந்த 2008-ம் ஆண்டு லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் படகுகள் மூலம் ஊடுருவி தாஜ் ஓட்டல், மும்பை ரயில் நிலையம், யூத வழிபாட்டுதலம் உட்பட பல இடங்களில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அமெரிக்கர்கள் 6 பேர் உட்பட 166 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு திட்டம் தீட்டி கொடுத்த தீவிரவாதி தஹாவூர் ராணா (64) அமெரிக்காவில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.