ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே இன்று அதிகாலை மெத்தை தயாரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. ராணிப்பேட்டை அடுத்த சிப்காட் பகுதியில் தனியாருக்கு சொந்தமான மெத்தை தயாரிப்பு தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் மெத்தைகள் பல இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணியளவில் மெத்தை தயாரிப்பு ஆலையில் இருந்து கரும்புகையுடன் தீ எரிந்துகொண்டிருந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்தனர். அதன்பேரில் ராணிப்பேட்டை மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் மற்றும் கருகிய பொருட்களின் மதிப்பு குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். அதிகாலையில் தீ விபத்து நடந்ததால் யாருக்கும் பாதிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
The post ராணிப்பேட்டை அருகே அதிகாலை மெத்தை தயாரிப்பு ஆலையில் திடீர் தீ appeared first on Dinakaran.