சென்னை: மத்திய தொழில் துறை பாதுகாப்பு படையின் (சிஐஎஸ்எப்) 56வது நிறுவன தினத்தினை முன்னிட்டு இன்று ராணிப்பேட்டை தக்கோலம் பகுதியில் உள்ள தொழில் பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் நடக்கும் விழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு சைக்கிள் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
இது குறித்து சிஐஎஸ்எப் இயக்குனர் ராஜ் விந்தர்சிங் பாட்டியா நிருபர்களிடம் கூறுகையில்,‘‘மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடத்தப்படும் சைக்கிள் பேரணியை ஒன்றிய அமைச்சர் அமித்ஷா (இன்று) தொடங்கி வைக்கிறார். இந்த சைக்கிள் பேரணி 25 நாட்களில் 3,775 கி.மீ தூர மேற்கு பாதையையும், 2,778 கி.மீ தூர கிழக்குப் பாதையையும் கடப்பார்கள்’’ என்றார்.
தென்மண்டல ஐஜி சரவணன் கூறுகையில், ‘‘விமான நிலையத்தில் பயணிகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என சிஐஎஸ்எப் வீரர்களுக்கு பயிற்சி வழங்குகிறோம். பயணிகளிடம் கடுமையாக நடந்து கொள்ள கூடாது என அறிவுறுதல் உள்ளது. சமூக வலைதளம் மற்றும் செய்திகளை கூர்ந்து கவனிக்கின்றோம் தவறு செய்யும் வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்கிறோம். சென்னை விமான நிலையத்தில் 60 சதவீதம் பேர் இங்கு பேசக்கூடிய மொழி தெரிந்தவர்களாக உள்ளனர் என்றார்.
The post ராணிப்பேட்டை தக்கோலத்தில் இன்று மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 56ம் ஆண்டு விழா: சைக்கிள் பேரணியை உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார் appeared first on Dinakaran.