சென்னை: ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், 100 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடியை கையில் ஏந்தி காங்கிரசார் ஜெய்ஹிந்த் பேரணி நடத்தினர். இந்திய ராணுவ வீரர்களின் வீர தீர செயல்களை பாராட்டும் விதமாகவும், தங்களுடைய உயிரை பணயம் வைத்து இந்திய மக்களை காக்கும் ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையிலும் இக்கட்டான சூழ்நிலையில் அவர்களுக்கு உறுதுணையாக நாங்கள் இருக்கின்றோம் என்பதை எடுத்துக்காட்டும் வகையில் தமிழக காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் கட்சியினர் தேசிய கொடி ஏந்தி ஜெய்ஹிந்த் பேரணியை நடத்தினர். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், சென்னை புதுப்பேட்டையிலிருந்து எழும்பூர் வரை தேசியக்கொடியை ஏந்தி ஜெய்ஹிந்த் பேரணி நடைபெற்றது.
பேரணியில், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு, நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் புரூஸ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் அறிவழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் துரை சந்திரசேகர், அசன் மவுலானா, சென்னை மாவட்ட தலைவர்கள் சிவராஜசேகரன், டில்லி பாபு, மாநில அமைப்பு செயலாளர் ராம் மோகன் மாநில பொதுச் செயலாளர்கள் தளபதி பாஸ்கர், அருள் பெத்தையா உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த பேரணியில் சுமார் 100 மீட்டர் நீளம் கொண்ட தேசிய கொடியை கையில் ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
The post ராணுவ வீரர்களுக்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில் 100 மீட்டர் நீளம் கொண்ட தேசியக்கொடியை கையில் ஏந்தி காங்கிரசார் ஜெய்ஹிந்த் பேரணி: செல்வப்பெருந்தகை தலைமையில் நடைபெற்றது appeared first on Dinakaran.