ராமநாதபுரம்: ராமநாதபுரம் உலகப் பிரசித்தி பெற்ற கீழக்கரை ஏர்வாடி சுல்தான் சையது இப்ராஹிம் பாதுஷா ஒளி உள்ளார் தர்காவின் 851ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஏர்வாடி சந்தனக்கூடு திருவிழா என்பது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி தர்காவில் உள்ள ஏர்வாடியில் உள்ள சுல்தான் சையது இப்ராகிம் ஷஹீத் பாதுஷா நாயகம் அவர்களின் கல்லறையை நினைவுகூரும் வகையில் ஒரு மாதம் நடைபெறும் திருவிழாவாகும். இத்தர்ஹாவில் ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்கத்திற்கான சந்தனக்கூடு விழா வெகுவிமர்சையாக நடைபெறுவது வழக்கம்.
இந்நிலையில் கீழக்கரை ஏர்வாடி தர்காவின் 851ம் ஆண்டு மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர். இன்று ஒரு நாள் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post ராமநாதபுரம் உலகப் பிரசித்தி பெற்ற ஏர்வாடி தர்ஹா மதநல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது.!! appeared first on Dinakaran.