அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாக ராமர் கோயில் அறக்கட்டளைக்கு மின்னஞ்சல் வந்ததை தொடர்ந்து, அது தொடர்பாக போலீஸார் விசாரணை தொடங்கியுள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் இந்த மின்னஞ்சலை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு ஆங்கிலத்தில் அனுப்பியுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இருப்பினும் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை ஊடகங்களுடன் காவல் துறையினர் பகிர்ந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக ராமர் கோயில் அறக்கட்டளை அல்லது பாதுகாப்பு அமைப்புகள் சார்பில் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.