புதுடெல்லி: ஒடிசாவின் புவனேஸ்வரில் நடைபெற்று வரும் 18-வது வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மாநாட்டில், ராமாயணம் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. ‘விஷ்வரூப் ராம்: தி யுனிவர்சல் லெகசி ஆஃப் ராமாயணா’ எனும் பெயரில் உள்ள அதில் ராவணன் இசைக்கருவி உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
இந்த வருடம் ஒடிசா மாநிலத்தின் தலைநகரான புவனேஸ்வரில் 18-வது பிரவாசி பாரதிய திவஸ் நடைபெற்று வருகிறது. ஜனவரி 8 – 12 வரையில் நடைபெறும் இதில், ‘விஸ்வரூப் ராம்: தி யுனிவர்சல் லெகசி ஆஃப் ராமாயணம்’ எனும் கண்காட்சியும் நடைபெறுகிறது. வெளியுறத் துறை அமைச்சகம் சார்பிலான இக்கண்காட்சியில், வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக ராமாயணம் காண்பிக்கப்படுகிறது. இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை அவர்களுக்கு நினைவூட்டுவதே இந்தக் கண்காட்சியின் நோக்கம் என வெளியுறவுத்துறை குறிப்பிட்டுள்ளது.