ராம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பறந்து போ’ திரைப்படம் ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
‘பேரன்பு’ படத்துக்குப் பிறகு ‘ஏழு கடல் ஏழு மழை’ படத்தை இயக்கி முடித்துள்ளார் இயக்குநர் ராம். அதனைத் தொடர்ந்து ஹாட்ஸ்டார் ஓடிடி நிறுவனத்துக்காக ‘பறந்து போ’ என்ற காமெடி படத்தினை இயக்கினார். தற்போது இதன் பணிகள் முடிந்துவிட்டதால், ஜூலை 4-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
மிர்ச்சி சிவா, அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, அஜு வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். பின்னணி இசையினை யுவன் மேற்கொண்டுள்ளார். முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து ராம் இயக்கியுள்ளார். இதன் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி ஜூலை 4-ம் தேதி வெளியிடுகிறது.