ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை விடுதலை செய்து இலங்கை ஊர்க்காவல் துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான மீனவர்கள் மூவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. நவ.10இல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 23 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மீனவர்களை நிபந்தனையுடன் விடுவித்த நீதிமன்றம் படகு ஓட்டுநர் உள்பட மூவருக்கு சிறை விதித்தது. விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் யாழ்ப்பாணம் இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
The post ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரை விடுதலை: 3பேருக்கு சிறை தண்டனை விதிப்பு appeared first on Dinakaran.