ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ரயில் நிலைய சீரமைப்பு பணிகள் டிசம்பர் மாதத்தில் முடிவடையும் என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
பாம்பன் புதிய தூக்கு பாலம் திறப்பு விழாவில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் பேசியதாவது:
ராம நவமி நாளில் பாம்பன் தூக்கு பாலம் நாட்டுக்கு அர்ப்பணிக்கபட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பொறியியல் தொழில்நுட்பத்தில் இந்த பாலம் ஒரு அதிசயம். இந்தியாவில் முதல் செங்குத்து கடல் தூக்கு பாலம் இதுவே. தமிழர்களின் கலாச்சாரத்துடன் இணைக்கும் இந்தப் பாலம் தேசிய வளர்ச்சிக்கான கனவின் மைல்கல். இது தமிழகத்தின் எழுச்சி. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு ரயில் திட்டங்களுக்கு ரூ.6,600 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.