சென்னை: ராம்கோ சூப்பர்கிரீட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ – ‘சீர்மிகு பொறியாளர் விருது' வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
கட்டுமானத்திலும், கட்டமைப்பிலும் சிறப்பான முறையிலும், தனித்துவத்துடனும் செயலாற்றி வரும் பொறியாளர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்கோ சூப்பர்கிரீட் சிமென்ட் வழங்கும் ‘இந்து தமிழ் திசை’ – ‘சீர்மிகு பொறியாளர் விருது’, ‘வளர்மிகு பொறியாளர் விருது’, ‘திறன்மிகு பொறியாளர் விருது – 2024’ வழங்கும் விழா சென்னை தி.நகரில் உள்ள வாணி மஹாலில் நடைபெற்றது.