மும்பை: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்த ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் குவித்தது.