சென்னை: இந்திய தொழிலதிபர்கள் ரியல் எஸ்டேட் மற்றும் ஆடம்பர பொருட்கள் சார்ந்து அதிகம் செலவிடுவதாக ஹெச்எஸ்பிசி ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இது உலக நாடுகளை சேர்ந்த தொழிலதிபர்கள் செலவிடும் சராசரி விகிதத்தை காட்டிலும் அதிகம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெச்எஸ்பிசி-யின் சர்வதேச ஆன்ட்ரபிரனரியல் வெல்த் ரிப்போர்ட் 2024-ம் ஆண்டு ஆய்வறிக்கையின் மூலம் இந்திய தொழிலதிபர்களின் வாழ்க்கை முறை மற்றும் முதலீடு சார்ந்த பழக்கவழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம் இதில் குறிப்பிடத்தக்கது. 10-ல் 6 இந்திய தொழிலதிபர்கள் தங்கள் வசம் உள்ள நிதியை ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடுகளுக்கு ஒதுக்குகின்றனர். குறிப்பாக சொத்துகள் அதிகம் கொண்டுள்ள தொழிலதிபர்கள், பங்குகள், பத்திரங்கள் மற்றும் ரியல் எஸ்டேட் சார்ந்த முதலீடுகளில் கவனம் செலுத்துவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.