
கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘ரிவால்வர் ரீட்டா’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
ஜே.கே சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ், ராதிகா சரத்குமார், ரெடின் கிங்ஸ்லி, மைம் கோபி, சூப்பர் சுப்பராயன், அஜய் கோஷ், ஜான் விஜய் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘ரிவால்வர் ரீட்டா’. இதற்கு ஒளிப்பதிவாளராக தினேஷ் கிருஷ்ணன், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளார். முழுக்க காமெடி த்ரில்லர் பாணியில் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறார்கள். இப்படம் வரும் நவ. 28 திரையரங்குகளில் வெளியாகிறது.

