
ரிஷப் ஷெட்டி இயக்கி, ஹீரோவாக நடித்த ‘காந்தாரா: சாப்டர் 1’ சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இந்தப் படம் இதுவரை ரூ.710 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இதையடுத்து ரிஷப் ஷெட்டி, ஆன்மிக பயணத்தைச் சமீபத்தில் மேற்கொண்டார். மைசூரில் உள்ள சாமுண்டி மலையிலிருந்து ஆன்மிக பயணத்தைத் தொடங்கிய அவர், அங்குள்ள சாமுண்டேஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்தார். பின்னர் ‘தக்‌ஷண காசி’ சென்று பிரார்த்தனை செய்தார்.
அதன் தொடர்ச்சியாகக் காசிக்கு சென்ற அவர், கங்கா ஆரத்தியில் பங்கேற்றார். பின்னர் காசி விஸ்வநாதர்கோயிலில் தரிசனம் செய்தார். இது தொடர்பான புகைப்படங்களை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தைக் கலாச்சார மற்றும் ஆன்மிக நிகழ்வாக மாற்றியதற்கும், உலகம் முழுவதும் இருந்து படத்துக்கு கிடைக்கும் அன்புக்கும் ஆதரவுக்கும் படக்குழு நன்றி தெரிவித்துள்ளது.

