ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், சோனம் கபூர் நடித்து ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்த இந்தப் படம் மூலம் தனுஷ் இந்தியில் அறிமுகமாகி இருந்தார்.
இந்தப் படம் 2013 -ம் ஆண்டு ‘அம்பிகாபதி’ என்ற பெயரில் தமிழில் வெளியானது. இதை இப்போது அப்ஸ்விங் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் நவீன தொழில் நுட்பத்துடன் ஆக.1-ம் தேதி மீண்டும் ரிலீஸ் செய்கிறது.