விஜய் நடித்த ‘பகவதி’ திரைப்படம் ரீரிலீஸ் ஆகவுள்ளது. மார்ச் 21-ம் தேதி ஆர்யா நடித்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ படம் வெளியாகவுள்ளது. தற்போது அப்படத்துடன் வெளியாகவுள்ளது ‘பகவதி’.
2002-ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் ‘பகவதி’. லட்சுமி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெங்கடேஷ் இயக்கத்தில் உருவான படம் ‘பகவதி’. விஜய், ஜெய், ரீமா சென், வடிவேலு, ஆசிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.