கிறிஸ்டோபர் நோலன் இயக்கி, 2014-ம் ஆண்டு வெளியான அறிவியல் புனைகதை படம், ‘இன்டர்ஸ்டெல்லர்’. மேத்யூவ் மெக்கானாகே, அன்னி ஹாத்வே, ஜெஸிகா சாஸ்டைன், பில் இர்வின் உட்பட பலர் நடித்த இந்தப் படம் உலகம் பெரும் முழுவதும் வரவேற்பைப் பெற்றது. சயின்ஸ் பிக்‌ஷன் படங்களின் பாணியை முற்றிலுமாக மாற்றி ஒரு புதிய பாதையை திறந்த இந்த படம் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸுக்கான ஆஸ்கர் விருதை வென்றது. உலகம் முழுவதும் 681 மில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை படைத்தது.
இந்தப் படம் வெளியாகி 10 ஆண்டு நிறைவானதைக் குறிக்கும் வகையில் கடந்த ஆண்டு டிச.6-ம் தேதி உலகம் முழுவதும் ரீ-ரிலீஸ் ஆனது. ஆனால், இந்தியாவில் ‘புஷ்பா 2’ காரணமாக ஐமேக்ஸ் உட்பட போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ரிலீஸ் ஆகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். இதனையடுத்து, இந்தப் படம் இந்தியாவில் கடந்த பிப்.7-ம் தேதி வெளியானது.