ஆர்யா நடிப்பில் பிரபலமான ‘பாஸ் (எ) பாஸ்கரன்’ திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் ஆகவுள்ளது.
’கில்லி’ படத்தின் மாபெரும் வெற்றியால், பல்வேறு பழைய படங்கள் மீண்டும் வெளியிடப்பட்டு வருகின்றன. இப்பட்டியலில் இணைந்துள்ளது ‘பாஸ் (எ) பாஸ்கரன்’. 2010-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற படம் இது. இதன் காமெடி காட்சிகள் இப்போதும் கொண்டாடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.