நடப்பு ஐபிஎல் சீசனின் 11-வது லீக் ஆட்டம் குவாஹாட்டியில் உள்ள பார்சபரா ஸ்டிடேடியத்தில் இன்று நடைபெற்றது. சிஎஸ்கே – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் சிஎஸ்கே அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது.
முதலில் இறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் பேட்டிங் செய்தனர். இதில் ஜெய்ஸ்வால் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். 20 ரன்கள் வரை தாக்குப் பிடித்த சஞ்சு சாம்சன் 7வது ஓவரில் நூர் அஹமது வீசிய பந்தில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.