புதுடெல்லி: அடுத்த நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ.10 லட்சம் வரை வருமான வரி விலக்கு அளிக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான வருமானத்துக்கான வரி விதிப்பை 30%-ல் இருந்து 25% ஆக குறைக்கவும் அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
2025-26-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் எத்தகைய அறிவிப்புகள் வரலாம் என்பது தொடர்பாக அரசாங்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன. அதன்படி, "ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய நிதித்துறை வட்டாரங்கள், 'ரூ.10 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு வரியிலிருந்து விலக்கு அளிப்பது மற்றும் ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரையிலான ஆண்டு வருமானத்துக்கு புதிதாக 25% வரி விதிப்பு அறிமுகப்படுத்துவது என இரண்டு வாய்ப்புகளையும் நாங்கள் மதிப்பீடு செய்கிறோம்.