கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம், ஆள்ளகட்டா சட்டமன்ற தொகுதியின் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர் அகிலபிரியா. இவர் இளம் வயதிலேயே ஆந்திர மாநிலத்தின் அமைச்சராக கடந்த சந்திரபாபு ஆட்சியின் போது பதவி வகித்தார்.
நடிகை ரோஜா, பதவி வகித்த சுற்றுலா மற்றும் இளைஞர் மேம்பாடு துறையின் அமைச்சராகவே அகில பிரியாவும் பதவி வகித்தார். இந்நிலையில், நேற்று அவர் கர்னூலில் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில், நடிகை ரோஜா அமைச்சராக இருந்தபோது, ‘ஆடுதாம் ஆந்திரா’ எனும் பெயரில் மாநிலம் முழுவதும் விளையாட்டுகளை ஊக்கப்படுத்துவதாக கூறி சுமார் ரூ.100 கோடி வரை ரோஜா ஊழல் செய்துள்ளார்’’ என்று புகார் தெரிவித்துள்ளார்.